சிறுவந்தாடு விற்பனைக்கூடத்தில் விளைபொருட்கள் கொள்முதல் !
விழுப்புரம் விற்பனைக்குழுவின் கட்டுப்பாட்டில் இயங்கும் சிறுவந்தாடு துணை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் விவசாயிகளால் விளைவிக்கப்படும் நெல், உளுந்து, காராமணி, மணிலா, பருத்தி போன்ற அனைத்து வேளாண்மை விளைபொருட்களும் மறைமுக ஏலத்தின் மூலம் வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்படும் பணி தொடங்கி உள்ளது.

இதன் விற்பனையை மாவட்ட வேளாண் விற்பனைக்குழு செயலாளர் சந்துரு தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறுகையில், விவசாயிகளால் சிறுவந்தாடு துணை ஒழுங்குமுறை விற்ப னைக்கூடத்திற்கு கொண்டு வரப்படும் விளைபொ ருட்களுக்கு மறைமுக ஏலத்தின் மூலம் ஏலம் நடத்தப்பட்டு விளைபொருட்களுக்கு அதிக லாபம் பெற்றுத்தரப்படுகிறது.
எனவே சுற்றுவட்டாரப் பகுதி விவசாயிகள், விளைபொருட்களை சிறுவந்தாடு துணை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்திற்கு கொண்டு வந்து விற்பனை செய்து பயனடையலாம் என்றார். அப்போது ஒழுங்குமுறை விற்பனைக்கூட பொறுப்பாளர் தம்பு வெங்கட்ராமன், தி.மு.க. ஒன்றிய செயலாளர் பிரபாகரன், விவசாய சங்க பிரதிநிதிகள் சந்திரசேகர், அய்யனார் மற்றும் பலர் உடனிருந்தனர்.