பெண்ணை கீழே தள்ளி  தாக்கி செயின் பறிப்பு 

திங்கள் நகர் அருகே பெண்ணை கீழே தள்ளி தாக்கி தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.;

Update: 2024-03-29 04:41 GMT

லைசா

குமரி மாவட்டம் திங்கள்நகர் அடுத்த கண்ணோடு பகுதியை சேர்ந்தவர் வின்சென்ட்  இவர் கடந்த சுமார் 1 வருடத்திற்க்கு முன்னால் இறந்துவிட்டார். இவரது மனைவி லைசா (55) இவர் முரசன்கோடு வாலான்குளம் அருகே நேற்று மாலை புல் பறித்துக் கொண்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது பூச்சிக்காடு அருகே உள்ள காவு கோவில் அருகே சென்று கொண்டிருந்த போது பெயர் ஊர்தெரியாத, அதே வேளை அடையாளம் தெரிந்த நபரும் அவருடன் வந்த மற்றொருவரும் அங்கு வந்துள்ளனர்.     

Advertisement

 ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் வைத்து கண்ணிமைக்கும் நேரத்தில் லைசாவை கீழே தள்ளிவிட்டு ஒருவன் லைசாவின் முதுகு பகுதியில் ஏறி தலையை கீழ அழுத்தியும், மற்றெருவர் அவர் கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் 500 மில்லிகிராம் தங்க செயினையும் பறித்து கொண்டு மின்னல் வேகத்தில் அருகில் உள்ள வாலன்குளம் வழியாக தப்பி சென்றுவிட்டனர்.  இது தொடர்பாக  லைசா இரணியல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் சம்பவ இடம் சென்று இரணியல் போலீஸ் ஆய்வாளர் பத்மாவதி சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றார். தப்பி சென்றவர்களை அருகில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் மூலம் ஆய்வு செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News