விவசாயிகளுக்கு ராபி பருவ தொழில் நுட்ப பயிற்சி
Update: 2023-12-06 06:43 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வேளாண்மைத்துறையின் சார்பில்,கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சி திட்டம் நடுப்பட்டி கிராமத்தில் அட்மா திட்டத்தின் கீழ் கிராம வேளாண் முன்னேற்ற குழு விவசாயிகளுக்கு ராபி பருவ தொழில் நுட்ப பயிற்சி நடந்தது. பயிற்சியில் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் முனைவர் கருப்பையா தலைமை வகித்து. உலக மண் தினமாக டிசம்பர் -5 கொண்டாடப்படுகிறது. மண் மற்றும் நீர் வாழ்வின் ஆதாரம் எனவும், மண் மாதிரி பரிசோதனையின் அவசியம் குறித்தும் சிறுதானிய பயிர் சாகுபடி குறித்தும் ராபி பருவ தொழில் நுட்பங்கள் குறித்து விளக்கி கூறினார். வேளாண்மை அலுவலர் பிரபாவதி துறை சார்ந்த திட்டங்கள் மண் பரிசோதனை செய்தல் மற்றும் மண் பரிசோதனை அட்டை மானிய திட்டங்கள் குறித்து விளக்கினார். இதில் உதவி வேளாண்மை அலுவலர் அஷ்டலட்சுமி பயிர்கடன் அட்டைபெற விண்ணப்பிப்பது பற்றியும் அதற்கு தேவையான ஆவணங்கள் குறித்து விளக்கி கூறினார். வட்டார தொழில் நுட்ப மேலாளர் சதீஷ்குமார் மண் மாதிரி சேகரித்தல் குறித்து செயல்விளக்கம் செய்து காண்பித்து மண் மாதிரி பரிசோதனையின் பயன்கள் குறித்து விளக்கினார். உதவி தொழில் நுட்ப மேலாளர் சாரதி உலக மண் தின வீடியோ காட்சிகள் காட்சிப்படுத்தினார். விவசாயிகளுக்கு மண் மாதிரி செய்யயப்பட்ட முடிவுகளின் மண் மாதிரி அட்டை முனைவர் கருப்பையா வழங்கினார். இதில் 40 க்கும் மேற்ப்பட்ட விவசாயிகள் கலந்து கொன்டனர்.