பனமுகை கிராமத்தில் ரபி பருவ பயிற்சி

Update: 2023-11-18 03:51 GMT

பனமுகை கிராமத்தில் ரபி பருவ பயிற்சி


இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் வட்டாரம் மாநில விரிவாக்க திட்டங்களின் உறுதுணை சீரமைப்பு திட்டம் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை 2023 -24 கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் கிராம அளவிலான வேளாண் முன்னேற்றக் குழு ரபி பருவம் முதல் கட்டப் பயிற்சியானது

சுமங்கலி ,பிரம்மதேசம், பனமுகை கிராமங்களில் 25‌ விவசாயிகளைக் கொண்ட குழுவிற்கு வட்டார தொழில் நுட்பக் குழுஅமைப்பாளர் மற்றும் வேளாண்மை உதவி இயக்குனர் சண்முகம் தலைமையிலும் வேளாண்மை அலுவலர் ரேணுகாதேவி ஆலோசனையுடனும் துணை வேளாண்மை அலுவலர் .ரா. சுப்பிரமணியம் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை அலுவலர்கள் கங்காதரன் , பத்மஸ்ரீ, சு நடராஜன் மற்றும் கிராம முதன்மை அலுவலர்( village nodal officer) திகழ்மதி அருள் செல்வம் உதவி வேளாண்மை அலுவலர் கர்ணன் உதவி தோட்டக்கலை அலுவலர் நரசிம்மன் உதவி தோட்டக்கலை அலுவலர் அவர்களாலும் கிராம அளவிலான முன்னேற்ற குழுவிற்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

Advertisement

இப்பயிற்சியில் வெம்பாக்கம் வட்டார தொழில் நுட்பக் குழு அமைப்பாளர் மற்றும் வேளாண்மை உதவி இயக்குனர் திரு.ம .சண்முகம் அவர்கள் மத்திய மற்றும் மாநில அரசால் விவசாயிகளுக்கு செயல்படுத்தப்படும் திட்டங்கள் பற்றியும் அதன் பயன்பாடுகள் பற்றியும் விவசாயிகளுக்கு எடுத்துக் கூறினார் வெம்பாக்கம் வட்டார வேளாண்மை அலுவலர் ரேணுகாதேவி சிறுதானிய ஆண்டின் (2023) சிறப்புத்துவம் பற்றியும் சிறுதானியத்தின் சிறப்புகள் மற்றும் அதை பயிரிடக்கூடிய முக்கியத்துவத்தை பற்றியும் வேளாண் துறையில் சிறுதானியங்களுக்காக செயல்படுத்தப்படும் திட்டங்கள் பற்றியும் அதன் மானியங்கள் பற்றியும் பண்ணை கருவிகள் வழங்குதல் பற்றியும் குழு விவசாயிகள் இடையே தெளிவாக விளக்கி கூறினார்.

துணை வேளாண்மை அலுவலர் ரா. சுப்பிரமணியம் அவர்கள் விதை நேர்த்தி, விதையை கடினப்படுத்துதல் , உயிர் உரங்கள், திரவ உயிர் உரத்தின் பயன்பாடு ஆகியவற்றைப் பற்றி தெளிவாக விவசாயிகளுக்கு விளக்கிக் கூறினார் .கிராம முதன்மை அதிகாரி திகழ் மதி மண்வளம் காத்தல் ,மண் பரிசோதனை, நீர் பரிசோதனை ,நீர் மேலாண்மை, கோடை உழவு ,ஆகியவற்றை பற்றியும் அதன் முக்கியத்துவத்தை பற்றியும் விளக்கினார்.‌‌ கங்காதரன் வட்டார தொழில் நுட்ப மேலாளர். ( vilage nodal officer ) E- NAM பற்றி குழு உறுப்பினர்களிடையே விளக்கிக் கூறினார்.

உதவி தொழில் நுட்ப மேலாளர் சீ. பத்மஸ்ரீ உழவன் செயலி பயன்பாடுகள் மற்றும் அதனை பயன்படுத்தும் முறை உழவன் செயலிக்குள் இருக்கும் ஒவ்வொரு துறையின் செயல்பாட்டு திட்டங்கள் பற்றியும் உழவன் செயலில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள தமிழ் மண்வளம் என்பதின் பயன்பாடுகள் பற்றியும் மற்றும் பிரதம மந்திரியின் பி .எம். கிசான் திட்டத்தைப் பற்றியும் விவசாயிகளுக்கு எடுத்துக் கூறினார். உதவி தொழில் நுட்ப மேலாளர் திரு .சு .நடராஜன் இப்பயிற்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து பயிற்சி இறுதியில் அனைவருக்கும் நன்றி கூறி வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமையில் செயல்படுத்தப்பட்டு வரும் பயிற்சிகள் செயல் விளக்கங்கள் பற்றியும் விவசாயிகளுக்கு எடுத்துக் கூறினார்.

இப்பயிற்சியில் உறுப்பினர்கள் கலந்து கொண்டு வேளாண்துறை திட்டங்கள் பற்றியும் அதில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் பற்றியும் அறிந்து தங்களுக்கு ஏற்பட்ட சந்தேகங்களை வேளாண் துறை அலுவலர்களிடையே கேட்டு நிவர்த்தி செய்து கொண்டனர் இப்ப பயிற்சியில் தோட்டக்கலை துறையைச் சார்ந்த நரசிம்மன் உதவி தோட்டக்கலை அலுவலர் தோட்டக்கலைத் துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் மானியங்கள் ஆகியவற்றை பற்றி எடுத்துக்கூறி விவசாயியின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தார். இப்பயிற்சியின் போது வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை வெம்பாக்கம் வட்டார விவசாயிகள் ஆலோசனை குழு தலைவர் வெங்கடேசன் கலந்து கொண்டு பயிற்சியினை சிறப்பித்தார்.

Tags:    

Similar News