சேலம் மாநகராட்சி பகுதிகளில் நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி முகாம்

சேலம் மாநகராட்சி பகுதிகளில் நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி முகாமை மேயர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்

Update: 2024-06-27 06:24 GMT

சேலம் மாநகராட்சி பகுதிகளில் நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி முகாமை மேயர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்

சேலம் மாநகராட்சி சார்பில் தெரு நாய்களுக்கு ரேபிஸ் என்ற சிறப்பு தடுப்பூசி போடும் முகாம் சேலம் புலிக்குத்தி தெருவில் உள்ள குகை பொது நலப்பிரியர் சங்க வளாகத்தில் நேற்று நடந்தது. இந்த முகாமை மேயர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாநகர நல அலுவலர் மோகன், பொது சுகாதார குழுதலைவர் ஏ.எஸ்.சரவணன், உதவி ஆணையாளர் வேடியப்பன் மற்றும் கவுன்சிலர் சுகாசினி, சுகாதார ஆய்வாளர்கள் ஆனந்தகுமார், சித்தேஸ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த முகாமில் மாநகராட்சி பகுதிகளில் உள்ள 162 நாய்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது.

சேலம் மாநகரில் ரேபிஸ் தடுப்பூசி போடும் சிறப்பு முகாம் ஒவ்வொரு புதன்கிழமையும் ஒவ்வொரு மண்டல அலுவலகத்திலும், அதன் வார்டு பகுதியிலும் நடத்தப்பட உள்ளது.

அதன்படி, ஜூலை 3-ந் தேதி சூரமங்கலம் மண்டல அலுவலகம் பின்புறம் உள்ள ரெட்டிப்பட்டி துப்புரவு ஆய்வாளர் வளாகத்திலும், 10-ந் தேதி அஸ்தம்பட்டி மண்டல அலுவலக பின்புற பகுதியில் உள்ள திரவுபதி அம்மன் கோவில் மைதானத்திலும், 17-ந் தேதி அம்மாபேட்டை மண்டல அலுவலகம் பின்புறம் வாய்க்கால்பட்டறையிலும், 24-ந் தேதி கொண்டலாம்பட்டி மண்டல அலுவலக பின்புறம் குகை மாரியம்மன் கோவில் மைதானத்திலும், 31-ந் தேதி சூரமங்கலம் மண்ட அலுவலக பின்புறம் ஜீவா நகரிலும் நாய்களுக்கான தடுப்பூசி போடும் முகாம் நடக்கிறது. எனவே பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி, தங்கள் பகுதியில் உள்ள நாய்களுக்கும் மற்றும் வீட்டில் வளர்க்கும் நாய்களுக்கும் இலவசமாக தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Tags:    

Similar News