மயிலாடுதுறையில் ராதா கல்யாண உற்சவம் நிறைவு
மயிலாடுதுறையில் மாயவரம் ராதாகல்யாண டிரஸ்ட் சார்பில் நடந்த ஸ்ரீராதா கல்யாண மகோற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.;
Update: 2024-02-26 01:07 GMT
கீதகோவிந்தம்
மயிலாடுதுறை வடக்கு ராமலிங்க அக்ரஹாரம் சார்பில் ஆண்டுதோறும் ராதாகல்யாண மகோற்சவம் நடத்தப்பட்டு வருகிறது. 69-ஆம் ஆண்டு உற்சவம் வெள்ளிக்கிழமை தொடங்கி 3 நாள் நடைபெற்றது. இதில், உடையாளூர் கே.கல்யாணராம பாகவதர் தலைமையில் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்திருந்த பாகதவர்கள் குழுவினரின் கீதகோவிந்தம் நடைபெற்றது. மேலும், விழாவில் அஷ்டபதி பஜனை, திவ்யநாம பஜனை, பக்தி பாடல்கள், கர்னாடக இன்னிசை, நாமஸங்கீர்த்தனம், விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம், சகஸ்ரநாம அர்ச்சனை, உபன்யாசம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. 3 நாள் விழாவின் சிகர நிகழ்வான ஸ்ரீராதாகல்யாணம் நேற்று மதியம் நடைபெற்றது. விழாவில், அபிநய அலங்கார திவ்யநாம பஜனை பாடப்பட்டு, பெண்கள் சீர்வரிசை எடுத்துவர, கோலாட்டம் நிகழ்ச்சியுடன் மாங்கல்ய தாரணம் செய்யப்பட்டு, விழாவின் 3 நாட்களும் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.