பாலமுருகன் கோவிலில் தெப்ப திருவிழா
பாலமுருகன் கோவிலில் தெப்ப திருவிழா
Update: 2024-05-23 05:30 GMT
கள்ளக்குறிச்சி அடுத்த இந்திலி கிராமத்தில் உள்ள பழமை வாய்ந்த பாலமுருகன் கோவிலில் வைகாசி விசாகத்தையொட்டி, தெப்ப திருவிழா நேற்று நடந்தது. இதையொட்டி, நேற்று காலை 9:00 மணிக்கு பால்குட ஊர்வலம் நடந்தது. 100க்கும் மேற்பட்டோர் இந்திலி கிராமத்தில் உள்ள பெருமாள் கோவிலில் இருந்து பால்குடம் ஏந்தி ஊர்வலமாக கோவிலுக்கு சென்றனர். அங்கு, பொதுமக்கள் அனைவரும் பாலமுருகர் சுவாமிக்கு பாலபிேஷகம் செய்தனர். தொடர்ந்து, மூலவர் பாலசுப்ரமணியன் சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம், மஞ்சள் காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. மாலை 6:00 மணிக்கு நடந்த தெப்ப உற்சவத்தில், பல வண்ண மலர்களுடன், மயில் வாகனத்தில் அலங்கரிக்கப்பட்ட பாலமுருகர் சுவாமியை குளத்தை சுற்றி வந்து, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. திரளான பொதுமக்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.