ராகுல் காந்தி பிறந்த நாள் விழா : மாணவர்களுக்கு உணவு வழங்கல்

ராகுல் காந்தி பிறந்த நாள் விழாவை ஒட்டி தூத்துக்குடியில் மாணவர்களுக்கு உணவு வழங்கபட்டது.

Update: 2024-06-20 13:07 GMT

உணவு வழங்கிய காங்கிரசார்

தூத்துக்குடியில் ராகுல் காந்தி பிறந்த நாள் விழா : மாணவர்களுக்கு உணவு வழங்கல்! புதன் 19, ஜூன் 2024 3:19:30 PM (IST) தூத்துக்குடியில் ராகுல் காந்தியின் 54-வது பிறந்தநாளை முன்னிட்டு லூசியா பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இன்று தனது 54-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

இதனை முன்னிட்டு தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பாக சில்வர்புரம் லூசியா பள்ளி மாணவர்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவர் ஏபிசிவி சண்முகம் ஆலோசனையின் பேரில் வடக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் ராகுல் தலைமையில் மதிய உணவு வழங்கப்பட்டது.

நிகழ்வில் மாமன்ற உறுப்பினர் சந்திரபோஸ் மாவட்ட காங்கிரஸ் செயலாளர் குமார.முருகேசன், தூத்துக்குடி சட்டமன்ற இளைஞர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஆரோக்கியம், மாநகர மாவட்ட காங்கிரஸ் கலைப்பிரிவு தலைவர் G.செல்வராஜ் ஓட்டபிடாரரம் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் தலைவர் சுரேஷ் , மாவட்டத் துணைத் தலைவர் ஜெயஜோதி, ஜேம்ஸ் புஷ்பராஜ், அந்தோணி ராஜ், ராபர்ட், 2வார்டு தலைவர் தாமஸ், மணி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News