தர்மபுரியில் ராகுல் காந்தி பிறந்த நாள் விழா கொண்டாட்டம்

தர்மபுரி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் ராகுல் காந்தி 54வது பிறந்தநாள் விழா கேக் வெட்டி கொண்டாடப்பட்டது

Update: 2024-06-20 04:43 GMT
தர்மபுரி மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல் காந்தி 54-வது பிறந்த நாள் விழா தர்மபுரியில் பேருந்து நிலையம் அருகே காங்கிரஸ் கட்சி அலுவலக வளாகத்தில் நேற்று மாலை கொண்டாடப் பட்டது. விழாவுக்கு மாவட்ட பொறுப்பாளர் தீர்த்தராமன் தலைமை தாங்கினார். மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் நரேந்திரன், ஜெய்சங்கர், கிருஷ்ணன், மகிலா காங்கிரஸ் மாவட்ட தலைவர் காளியம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொருளாளர் வடிவேல் வரவேற்று பேசினார். விழாவையொட்டி பிரம்மாண்ட கேக் வெட்டி கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் வட்டார தலைவர்கள் மணி, காமராஜ், ஞானசேகரன், பெரியசாமி, சிலம்பரசன், வெங்கடாசலம், நகர தலைவர் வேடியப்பன், ஐ.என்.டி.யூ.சி. நிர்வாகிகள் சென்னகேசவன், சிவலிங்கம், தங்கவேல், கட்சி நிர்வாகிகள் ராபர்ட், மணிகண்டன், மோகன் குமார் ராஜா, நாகராஜ், பிரகாசம், சிங்கராயன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News