ரயில்வே கேட் கீப்பர் தூக்குபோட்டு தற்கொலை !
தூத்துக்குடியில் ரயில்வே கேட் கீப்பர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ;
Update: 2024-03-08 12:15 GMT
தற்கொலை
தூத்துக்குடியில் ரயில்வே கேட் கீப்பர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தூத்துக்குடி சக்தி விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சாந்தவேல் மகன் வரதராஜ் குமார் (34). இவர் ஓசூரில் ரயில்வே கேட் கீப்பராக வேலைபார்த்து வருகிறார். இவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால் கடந்த 3 மாதமாக விடுப்பில் இருந்துள்ளார். மருந்து மாத்திரைகள் எடுத்தும் அவருக்கு நோய் குணமாகவில்லையாம். இதனால் மனவேதனையில் இருந்த வரதராஜ் குமார் நேற்று தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வடபாகம் காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் மாணிக்கராஜா வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.