இன்டர்சிட்டி ரயிலுக்கு இரணியலில் நிறுத்தம் - பயணிகள் கோரிக்கை

Update: 2023-11-19 08:22 GMT
இரணியல் ரயில் நிறுத்தம் 
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

நெல்லையில் இருந்து திருச்சிக்கு இன்டர்சிட்டி ரெயில் கடந்த 2012-ம் ஆண்டு ஜூலை மாதம் 15-ந்தேதி முதல் இயக்கப்பட்டு வந்தது. இந்த ரெயிலை குமரி மாவட்ட பயணிகள் பயன்படும் படியாக நீட்டிப்பு செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்கப் பட்டது. கடும் போராட்டத்தின் பலனாக 5 ஆண்டு கள் கழித்து 2017-ம் ஆண்டு ஜூலை 15-ந்தேதி முதல் நாகர்கோவில் டவுன் வழியாக திருவனந்தபுரம் வரை நீட்டிக்கப்பட்டது. இவ்வாறு நீட்டிப்பு செய்யும் போது நாகர்கோவில் டவுண் மற்றும் குழித்துறை ரெயில் நிலையங்களில் முதல் நிரந்தர நிறுத்தம் அனுமதிக்கப்பட்டது. இரணியல் ரெயில் நிலையத்தில் குறைந்த பட்சம் தற்காலிக நிறுத்தம் கூட கொடுக்கப்படவில்லை. தற்போது மதுரை முதல் நாகர்கோவில் வரை இருவழிபாதை பணிகள் 98 சதவீத பணிகள் முடிந்து விட்டது. இதனால் இந்த ரெயிலின் வேகம் அதிகரிக்கப்பட்டு பயண நேரம் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. ஆகவே இந்த ரெயிலுக்கு இரணியல் ரெயில் நிலையத்தில் நிறுத்தம் அனுமதிக்க வேண்டும் என்று கல்குளம் தாலுகாவை சேர்ந்த பயணிகள் கோரிக்கை விடுக்கின்றனர். இரணியல் ரெயில் நிலையத்தில் நிறுத்தம் அனுமதிக்கப்பட்டிருந்தால் 20 லட்சம் மக்கள் தொகை கொண்ட மாவட்டத்தில் 3 பிரிவாக பயணிகள் பயணம் செய்ய எளிதாக இருக்கும். ரெயில்வேத் துறைக்கு அதிக வருவாய் கிடைக்கும் என்று பயணிகள் சங்கத்தினர் கூறுகின்றனர்

Tags:    

Similar News