மழையினால் பாதிக்கப்பட்ட மக்கள் மாநகராட்சி அலுவலகம் முற்றுகை

தூத்துக்குடி மாநகரில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட போல்டன் புரம் பகுதி மக்களுக்கு எந்தவித நிவாரண உதவிகளும் கிடைக்காததை தொடர்ந்து பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு மாநகராட்சி மேயருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் கடும் பரபரப்பு

Update: 2023-12-20 09:38 GMT

மேயருடன் வாக்கு வாதம் 

தூத்துக்குடி மாநகரில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பெய்த பலத்த மழை காரணமாக மாநகரின் பல்வேறு பகுதியில் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது இந்நிலையில் போல்டன் புரம் பகுதியில் கடந்த சில நாட்களாக மழை வெள்ளத்தில் மூழ்கி அந்த பகுதியில் உள்ள சுமார் 5,000-க்கு மேற்பட்ட பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர் .

ஆனால் மாநகராட்சி நிர்வாகமும் மாவட்ட நிர்வாகமும் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை தேவைகளை நிறைவேற்ற எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது இதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி யுடன்வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது தங்கள் பகுதியை மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி மேயர் புறக்கணிப்பதாகவும் அமைச்சர் கீதா ஜீவன் மற்றும் உள்ளிட்ட அதிகாரிகள் யாரும் இதுவரை தங்களை சந்திக்கவில்லை, தாங்கள் யாசகம் கேட்கவில்லை பொதுமக்களை காப்பதற்காக உணவு குடிநீர் உள்ளிட்ட அடிப்படை தேவைகளை வழங்க வேண்டும் என்பது கோரிக்கை விடுத்தனர்‌ அவர்களுக்கு தண்ணீரை வெளியேற்றவும் தங்களுக்கு நிவாரண உதவி பொருட்கள் வழங்கவும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என மேயர் தெரிவித்ததை தொடர்ந்து அப்பகுதி மக்கள் கலைந்து சென்றனர்.

Tags:    

Similar News