திருமயம் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பொழிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.;
Update: 2024-05-11 05:29 GMT
மழை
திருமயம் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் சுட்டெரித்து வந்தது. இதனால் நீர்நிலைகள் வறண்டன. இந்நிலையில் நேற்று மதியம் திருமயம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கருமேகங்கள் திரண்டு இடி மின்னலுடன் கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. விவசாயிகள், பொதுமக்கள் இதனால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.