சாலையில் தேங்கிய மழைநீர் - நெடுஞ்சாலை துறை நடவடிக்கையால் நிம்மதி
Update: 2023-12-03 07:40 GMT
காஞ்சிபுரம் செங்கழுநீரோடை வீதியில், சாலையின் இருபுறமும் நெடுஞ்சாலைத் துறை சார்பில், மழைநீர் வடிகால்வாய் அமைக்கப்பட்டு உள்ளது. இதில், பஞ்சுகொட்டி தெரு சந்திப்பில் வடிகால்வாய் வாயிலாக, மழைநீர் வெளியேறும் இடத்தில் ஓட்டையை அடைத்து, நடைபாதை மற்றும் தள்ளுவண்டி வியாபாரிகள் அப்பகுதியில் கடை வைத்திருந்தனர். இதனால், மழைநீர் கால்வாய் வாயிலாக வெளியேற வழியின்றி சாலையில் தேங்குவது வாடிக்கையாக இருந்து வந்தது. இதனால், இருசக்கர வாகன ஓட்டிகள், பாதசாரிகள் அவதியடைந்தனர். எனவே, மழைநீர் வெளியேறும் கால்வாயை சீரமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்தது. இதையடுத்து வடிகால்வாயில் இருந்த அடைப்பை, நெடுஞ்சாலைத் துறை சார்பில் ஜே.சி.பி., இயந்திரம் வாயிலாக அகற்றினர்.