கனமழையால் திண்டுக்கல் சுரங்கப்பாதையில் மழைநீர் தேக்கம்
நேற்று மாலை பெய்த கனமழையால் திண்டுக்கல் பழைய கரூர் சாலையில் உள்ள சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கியது.
Update: 2024-05-16 07:54 GMT
திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் நேற்று மேகமூட்டமாக காணப்பட்டது. இந்நிலையில் நேற்று மாலை பெய்த கனமழையால் திண்டுக்கல் பழைய கரூர் சாலையில் உள்ள சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கியது. இதையடுத்து அப்பகுதியில் சென்று கார் மழைநீரில் செல்லமுடியாமல் சிக்கியது. இதையடுத்து அந்த வழியாக சென்ற மற்றவர்கள் காரை தள்ளிவிட்டு வெளியேற்றினர்.