வரும் 16 ந் தேதி ”வானவில் மையம்”பாலின வள மையம்
வரும் 16 ந் தேதி ”வானவில் மையம்”பாலின வள மையம் - அமைச்சா் மதிவேந்தன் திறந்து வைக்கிறார்
தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பின்படி, நாமக்கல் மாவட்டத்தில் திருச்செங்கோடு வட்டாரத்தில் வரகூராம்பட்டி ஊராட்சியில் கருமகவுண்டம்பாளையத்தில் உள்ள வட்டார கிராம சேவை மையக் கட்டடத்தில் ”வானவில் மையம்” எனும் பாலின வள மையம் 16.11.2023 அன்று துவக்கி வைக்கப்பட்டுள்ளது. அதற்கான நிகழ்ச்சியில் வனத்துறை அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் ச.உமா தலைமை தாங்குகின்றனா். நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், மக்களவை உறுப்பினருமான இராஜேஸ்குமார், திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன், நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளா் மதுரா செந்தில் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனா்.
சமூகத்தில் பின்தங்கிய பெண்கள் மற்றும் வளரிளம் பெண்கள் உடல்நலம் மற்றும் சமூகம் சார்ந்த பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். இதற்கு தீர்வு காணும் வகையில் ” வானவில் மையம் ” எனும் பாலின வள மையம் மூலம் ஊட்டச்சத்து, உடல் மற்றும் மன நலம், குழந்தை திருமணம், குடும்ப வன்முறை மற்றும் பாலியல் வன்கொடுமை போன்ற பெண்கள் தொடர்பான சமூகப்பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி தீர்வு காண வழிவகை செய்யப்படும். இம்மையத்தினை நிர்வகிக்க பாலின வள மைய மேலாளர் மகளிர் சுய உதவிக்குழுவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இம்மையத்திற்கான தொலைபேசி எண் 04288 – 295699 / 1098 / 181 பெண்கள் மற்றும் குழந்தைகள் பாலியல் மற்றும் குடும்ப வன்கொடுமை தொடர்பான பிரச்சனைகளுக்கு இம்மையத்தினை தொடர்பு கொண்டு தீர்வு காணலாம் என நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, தெரிவித்துள்ளார்.