ராணிப்பேட்டை மாவட்ட மழை நிலவரம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ஆற்காட்டில் 105.4 மி.மீட்டரும், வாலாஜா பகுதியில் 75 மில்லி மீட்டரும் பதிவாகியுள்ளது.

Update: 2024-06-19 06:23 GMT

மழை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழையின் அளவை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ஆற்காட்டில் 105.4 மி.மீட்டரும், வாலாஜா பகுதியில் 75 மில்லி மீட்டரும் பதிவாகியுள்ளது. ராணிப்பேட்டையில் 54.8 மில்லி மீட்டர், பாலார் அணைக்கட் பகுதியில் 54.2 மில்லி மீட்டர், அம்மூர் பகுதியில் 30 மில்லி மீட்டர், அரக்கோணம் பகுதியில் 41.4 மில்லி மீட்டர், மின்னல் பகுதியில் 53.4 மில்லி மீட்டர், காவேரிப்பாக்கம் பகுதியில் 48.6 மில்லிமீட்டர், பனப்பாக்கம் பகுதியில் 70.4 மில்லி மீட்டர், சோளிங்கரில் 24 மில்லி மீட்டர் மற்றும் கலவையில் 16.2 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

ஒட்டுமொத்தமாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் 573.4 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதன் சராசரி அளவு 52.13 மில்லி மீட்டர் ஆகும்.

Tags:    

Similar News