ஆனைக்குட்டம் அணையில் தேங்கியது மழைநீர்

ஆனைக்குட்டம் அணையில் தற்காலிகமாக ஷட்டர் பழுது பார்க்கப்பட்டதால், வேகமாக நிரம்பி ஓரளவு நீர் தேங்கி உள்ளது.

Update: 2023-12-07 10:33 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

விருதுநகர் அருகே ஆனைக்குட்டம் அணை உள்ளது. அர்ஜூனா நதியில் நீரை முழுவதும் தேங்குமிடமாக உள்ள இந்த அணை ஷட்டர் பழுதால் 5 ஆண்டுகளாக நிறையாமலும், போதிய நீர்வரத்து இல்லாமலும் காணப்பட்டது. இந்நிலையில் மாவட்ட நிர்வாகத்தின் சிறப்பு கவனத்தால் டெல்லி, சென்னை நீராதார ஆய்வு குழுக்கள் பார்வையிட்டு சென்றுள்ளன. இந்நிலையில் நீர்வள ஆதாரத்துறை ஷட்டர் பழுதை சரி செய்தது. பணிகள் முழுமை அடையவில்லை.ஷட்டர் பிரச்னைக்கு இன்னும் நிரந்தர தீர்வு ஏற்படவில்லை.

இருந்த போதிலும் தற்போது பெய்த கனமழையில் ஆனைக்குட்டம் அணை 23 அடிக்கு 15.58 அடி நிரம்பி உள்ளது. வழக்கமாக அணையில் முன்பகுதியில் மட்டும் தேங்கியிருக்கும் நீர், தற்போது கடைசி பகுதி வரை அடர்ந்துள்ளது. அணை முழுவதும் நீரோட்டம் காணப்படுகிறது. சிவகாசி, விருதுநகர் சுற்றுப்புற விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வைப்பாறு வடிநில கோட்ட பொறியாளர் கலைச்செல்வி கூறியதாவது: நீர்வள ஆதாரத்துறை மூலம் ஷட்டர் பழுது பார்க்கப்பட்டுள்ளது. புதுடில்லி, சென்னை நீராதார ஆய்வு குழுக்கள் பரிசோதித்து சென்றுள்ளனர். முடிவுகளின் அடிப்படையில் அணை தொடர்பான அடுத்தகட்ட மேம்பாட்டு பணிகள் செய்யப்படும், என்றார்.

Tags:    

Similar News