ரஜினிகாந்தின் பிறந்த நாள்-தங்கத் தேர் இழுத்த ரஜினி ரசிகர்கள்

பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்

Update: 2023-12-12 07:26 GMT

ரஜினிகாந்தின் பிறந்த நாளை ஒட்டி தங்கத் தேர் இழுத்த ரஜினி ரசிகர்கள்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 73 வது பிறந்தநாளை முன்னிட்டு உலகம் முழுவதும் உள்ள ரஜினி ரசிகர்கள் பல்வேறு கோயில்களில் சிறப்பு வழிபாடு செய்தும், பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்து வருகின்றனர். அந்த வகையில் மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டி மதுரையை சேர்ந்த ரஜினி ரசிகர்கள் தங்கத்தேர் இழுத்து சிறப்பு வழிபாடு செய்தனர். இந்நிகழ்வில் தமிழ் திரைப்பட நடிகர் மைம் கோபியும் கலந்து கொண்டு தங்கத்தேரினை இழுத்தார். இதனைத்தொடர்ந்து நடிகர் மைம் கோபி செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில்_ தலைவருக்கு வாழ்த்து சொல்லவில்லை வணங்குகிறேன், இன்று பிரமாண்டமாக தங்கத் தேர் இழுத்து இருக்கிறோம். தலைவர் நீண்ட நாள் நோய் நொடி இல்லாமல் வாழ இறைவனை பிரார்த்திக்கிறோம். தமிழ்நாட்டு தற்போது உள்ள நடிகர்கள் சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு பேசி வருகிறார்கள் என்பது குறித்த கேள்விக்கு சூப்பர் ஸ்டார் ஒன்றுதான் அவர் எப்போதும் ரஜினிகாந்த் தான். அவர மாதிரி ஸ்டைலா கோட்டு போட முடியுமா தலை நிமிர்ந்து பார்க்க முடியுமா என்று வியந்து பார்த்திருக்கிறோம் கபாலி படத்தில் நான் அடிக்கும்போது தலைவர் என்னை பாராட்டிய வார்த்தைகள் "எய் தம்பி செமையா பண்ணிட்டீங்க எப்படி, கலக்கிட்டீங்க என்று கூறிய வார்த்தைகள் பெரிய வார்த்தை"யாரை புகழ்றாங்களோ அவங்க எல்லாம் உயரத்திற்கு போவார்கள் என்பது பெரியவங்க வாழ்த்திய என்று தெரிவித்தார்.

Tags:    

Similar News