ராஜீவ் காந்தி நினைவு ஜோதி யாத்திரை கன்னியாகுமரி வந்தது

கன்னியாகுமரி வந்தடைந்த ராஜீவ் காந்தி நினைவு ஜோதி யாத்திரைக்கு காங்கிரஸ் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.;

Update: 2024-05-18 15:59 GMT
ராஜீவ் ஜோதி யாத்திரைக்கு கன்னியாகுமரியில் வரவேற்பு

கர்நாடக மாநில தொழிலாளர் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆண்டுதோறும் ராஜீவ் காந்தி நினைவு தினத்தை ஒட்டி பெங்களூரில் இருந்து கன்னியாகுமரி வழியாக ஸ்ரீபெரும்புதூருக்கு ராஜீவ் காந்தி நினைவு ஜோதி யாத்திரை நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டு 33வது ராஜீவ் காந்தி நினைவு ஜோதியாத்திரை பெங்களூரில் இருந்து கடந்த 15ஆம் தேதி புறப்பட்டது.      

இந்த ஜோதி யாத்திரை மைசூர், கோவை, பாலக்காடு, திருச்சூர், கொச்சி, ஆலப்புழா, கொல்லம், திருவனந்தபுரம், நாகர்கோவில் வழியாக நேற்று இரவு கன்னியாகுமரி வந்தடைந்தது.        

Advertisement

அதன் பிறகு இன்று காலை கன்னியாகுமரி காந்தி மண்டபம் முன்பு இருந்து ஸ்ரீபெரும்புதூர் நோக்கி புறப்பட்டு சென்றது. இந்த யாத்திரையை கன்னியாகுமரி மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் வரவேற்று வழி அனுப்பி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் எம்எல்ஏக்கள் ராஜேஷ்குமார், பிரின்ஸ், குமரி கிழக்கு மாவட்ட தலைவர் கே டி உதயம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.  

 கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்ட இந்த ஜோதிட யாத்திரை நாகர்கோவில் வந்தடைந்தது.  அங்கிருந்து நெல்லை, கோவில்பட்டி , சிவகாசி, சென்னை வழியாக ராஜீவ் காந்தி நினைவு தினமான வருகிற 21ஆம் தேதி ஸ்ரீ பெரும்புதூரை சென்றடைகிறார்கள்.

Tags:    

Similar News