ரேக்ளா ரேஸ்... சீறிப்பாய்ந்த மாடுகள்

மேலூர் அருகே நடந்த ரேக்ளா ரேஸில் சீறிப்பாய்ந்த 36 ஜோடி மாடுகளை பார்வையாளர்கள் ஆரவாரத்துடன் உற்சாகப்படுத்தினர்.

Update: 2023-12-27 13:23 GMT

 மேலூர் அருகே நடந்த ரேக்ளா ரேஸில் சீறிப்பாய்ந்த 36 ஜோடி மாடுகளை பார்வையாளர்கள் ஆரவாரத்துடன் உற்சாகப்படுத்தினர்.

மேலூர் அருகே மாட்டுவண்டி பந்தைய நண்பர்கள் சார்பாக நடைபெற்ற மாட்டுவண்டி பந்தயத்தில் 36 ஜோடிகள் போட்டியில் பந்தைய தூரத்தை சீறிப்பாய்ந்து கடந்து வந்த காளைகளையும், சாரதிகளையும் சாலையின் இருபுறமும் நின்று மகிழ்ச்சி ஆரவாரத்துடன் உற்சாக படுத்திய பார்வையாளர்கள் மதுரை மாவட்டம் மேலூர் அருகே பதினெட்டாங்குடியில் ரேக்ளாரேஸ் நண்பர்கள் சார்பாக இரட்டை மாட்டுவண்டி பந்தையம் நடைபெற்றது.

பதினெட்டாங்குடி - மேலூர் சாலையில் நடைபெற்ற இந்த போட்டியில், மதுரை, தேனி, திண்டுக்கல், திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து மாட்டுவண்டி உரிமையாளர்கள் கலந்துக்கொண்டு போட்டியில் பங்கேற்றனர். இதனைத்தொடர்ந்து, இருபிரிவுகளாக நடைபெற்ற இந்த மாட்டுவண்டி பந்தயத்தில், பெரியமாடு பிரிவில் 15 இரட்டை மாட்டுவண்டிகளும், சின்னமாடு பிரிவில் 21 இரட்டை மாட்டுவண்டி என ஜோடி மாடுகள் பங்கேற்று பந்தைய தூரத்தை சீறி பாய்ந்து கடந்து வந்தது. அப்போது, பந்தையம் நடைபெற்ற சாலைகளின் இருபுறமும் நின்றிருந்த பொதுமக்கள், போட்டியில் பங்கேற்று பந்தைய தூரத்தை சீறிப்பாய்ந்து கடந்து வந்த காளைகளையும், சாரதிக்களையும் மகிழ்ச்சி ஆரவாரத்துடன் உற்சாகபடுத்தினர். இதனைத்தொடர்ந்து, பெரியமாடு மற்றும் சின்னமாடு பிரிவுகளில் பந்தைய தூரத்தை கடந்து வந்து வெற்றி பெற்ற முதல் நான்கு மாட்டுவண்டியின் உரிமையாளர்களுக்கும், சாரதிக்கும் பரிசு தொகை மற்றும் நினைவு கோப்பை வழக்கப்பட்டது...

Tags:    

Similar News