ஊத்தங்கரையில் ரமலான் சிறப்பு தொழுகை
ஊத்தங்கரை ஈத்கா மஸ்ஜித் தர்கா பள்ளிவாசலில் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடைபெற்றது;
Update: 2024-04-11 09:20 GMT
கட்டித்தழுவி ரம்ஜான் வாழ்த்து
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை சுன்னத் ஜமாத் சார்பில் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடைபெற்றது இந்நிகழ்வில் சுன்னத் ஜமாத் பகுதியில் இருந்து ஈக்கா பள்ளிவாசல் வரையிலும் இஸ்லாமிய சகோதரர்கள் ஒன்று கூடி ஊர்வலமாக சென்று சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர் சிறப்பு தொழுகையில் 500க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் ஒன்றிணைந்து கடவுளை வழிபட்டனர் .இறுதியாக ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர் .இந்த நிகழ்ச்சியில் ஜமாத் முத்தவள்ளி பசூல் உஸ்மான், குரு அப்துல் சமத், சுன்னத் ஜமாத் முத்தவல்லி பதிவு ஜமா சுன்னத் ஜமாத் தலைவர் அமானுல்லா செயலாளர் சாகுல் ஹமீது பொருளாளர் ஜோக்கர் பாய் ஆலோசகர் ஷரீப் பாய், ஒருங்கிணைப்பாளர் ஜீலான் நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் இஸ்லாமியர்கள் திரளாக பங்கேற்றனர்.