ராமநாதபுரம்: பொதுமக்களுக்கு வேண்டுகோள்
மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுங்கள் என கீழக்கரை மக்களுக்கு வட்டாட்சியர் பழனிகுமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.;
Update: 2023-12-19 07:32 GMT
மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுங்கள் என கீழக்கரை மக்களுக்கு வட்டாட்சியர் பழனிகுமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தற்சமயம் கன்னியாகுமரி. தென்காசி தூத்துக்குடி. திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் கடும்மழை கொட்டி தீர்த்தது இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிப்படைத்து வருகின்றனர் இதையடுத்து ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வட்டாட்சியர் பழனி குமார் பொதுமக்களுக்கு ஒரு வேண்டுகோள் வைத்தார் அதில் கனமழை காரணமாக பாதிப்படைந்த மக்களுக்கு உதவும் வகையில் தங்களால் முதல் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும் என கேட்டிருந்த நிலையில் உடனடியாக கீழக்கரை நகர்மன்ற தலைவர் செஹானாஸ் ஆபிதா. அயலக அணி மாவட்ட துணை அமைப்பாளர் இப்திகார் ஹசன் நகர்மன்ற உறுப்பினர்கள் மீரான் அலி.நஸ்ருதீன். முகமது ஹாஜா சுஐபு மற்றும்.பல்வேறு அமைப்பினர் தொடர்ந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை கீழக்கரை வட்டாட்சியர் பழனி குமாரிடம் வழங்கி வருகின்றனர்.