ராமநாதபுரம்: தேனீ வளர்ப்பு கருத்தரங்கு

ராமநாதபுரம் மாவட்ட தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் மாவட்ட அளவிலான தேனீ வளர்ப்பு கருத்தரங்கு மாவட்ட ஆட்சியர் பா.விஷ்ணுசந்திரன் தலைமையில் நடைபெற்றது.

Update: 2024-07-05 05:08 GMT
ராமநாதபுரம் மாவட்டம், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை கீழ் தேசிய தேனீ வளர்ப்பு இயக்கம் சார்பில் மாவட்ட அளவிலான தேனீ வளர்ப்பு கருத்தரங்கு உச்சிப்புளியில் மாவட்ட ஆட்சியர் பா.விஷ்ணுசந்திரன் தலைமையில் நடைபெற்றது. இதற்கு முன்னதாக தேனீ வளர்ப்பில் எடுக்கப்பட்ட தேன் மற்றும் அதன் மூலம் தயாரிக்கப்பட்ட பொருட்களை பார்வையிட்டார். இதன் பின்னர் கருத்தரங்கு குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார். ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் அதிகளவில் தேனீ வளர்ப்பு மேற்கொள்ள வேண்டும் இதற்கு அரசின் சார்பில் அனைத்து உதவிகளும் செய்து தரப்படும். தேனீ வளர்பதன் மூலம் அதிகளவில் விவசாயம் உற்பத்தின அதிகாரிக்கும் அரசின் திட்டத்தை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார். இந்த நிகழ்ச்சியில், மண்டபம் ஊராட்சி ஒன்றியம் தலைவர் சுப்புலட்சுமி ஜீவானந்தம், துணைத்தலைவர் பவகதி லட்சுமி,வேளாண்மை அறிவியல் நிலைய பேராசிரியர் சுரேஸ்,தோட்டக்கலை உதவி இயக்குநர் ஜெகதீசன் மற்றும் அதிகாரிகள் 300 க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனர்.
Tags:    

Similar News