ராமநாதபுரம்: ரயில்வே சுரங்கப்பாறை அமைக்க கோரிக்கை

ராமநாதபுரம் பாம்பனில் ரெயில்வே சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் மத்திய மந்திரியிடம் தர்மர் எம்.பி. கோரிக்கை வைத்துள்ளார்.

Update: 2023-12-22 11:18 GMT

கோரிக்கை கடிதம் வழங்கிய எம்பி

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பகுதியைச் சேர்ந்தபொது மக்கள் ஆர்.தர்மர் எம்.பி.யிடம் மனுவில் கூறியதாவது, பாம்பன் வடக்கு பகுதியில் இருந்து தென் பகுதிக்கு செல்ல பாம்பன் ரெயில் நிலையம் அருகே கேட் எண் 1, 2 மட்டும் இயங்கி வந்த நிலையில் 2007-ம் ஆண்டு மீட்டர் கேஜ் ரெயில் பாதையாக மாற்றப்பட்டபோது நம்பர் 1கேட் மூடப்பட்டது.

பின்னர் கேட் 1-ல் இருந்த இடத்திற்கு மேல் பகுதியில் சுமார் 5 அடி அகலத்தில் கீழ்ப்பகுதியில் கற்களை கொண்டு படி அமைத்து 3 அடி உயரமுள்ள நடை மேடையில் இருந்து மக்கள் ஏறி இறங்கி ரெயில் பாதையை கடந்து வந்தனர். இந்நிலையில் பாம்பன் புதிய ரயில் பாலம் கட்டுமான பணி நடைபெற்று முடியும் தருவாயில் நடை பகுதியை இடித்து தற்போதுள்ள உயரத்தை விட அதிகமாக உயர்த்தி வேலை நடைபெறுகிறது. இதனால் வருங்காலத்தில் இப்பகுதியில் இருந்து வடக்கு, தென் பகுதிக்கு செல்வோர் ஊருக்குள் 1 கிலோமீட்டர் சுற்றிக்கொண்டு போக வேண்டும். எனவே எங்களுக்கு ரெயில்வே பாதையை கடக்க சுரங்கப்பாதை அமைத்து தருமாறு கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு அந்த மனுவில் தெரிவித்திருந்தனர். இதைத் தொடர்ந்து ஆர்.தர்மர் எம்.பி.டெல்லியில் மத்திய ரெயில்வே துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவை நேரில் சந்தித்து பாம் பன் பகுதி மக்களின் கோரிக்கை குறித்த மனுவை அளித்தார்.

இதை தொடர்ந்து மனுவை பரிசீலனை செய்த அமைச்சர் இது சம்பந்தமாக ரெயில்வே துறையினருக்கு உடனடியாக தகவல் கொடுக்கப்பட்டு மக்களின் கோரிக்கைகளை நிறை வேற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததாக ஆர்.தர்மர் எம்.பி. தெரிவித்தார். அப்போது மண்டபம் மேற்கு ஒன்றிய செயலாளர் சீனி மாரி உடன் இருந்தார்.

Tags:    

Similar News