ராமநாதபுரம் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் சாலை மறியல்

ராமநாதபுரத்தில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் சாலை மறியல் போராட்டம் போராட்டக்காரர்களை குண்டுகட்டாக தூக்கி அகற்றிய போலீசார்.

Update: 2024-01-30 10:01 GMT
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஜாக்டோ ஜியோ அமைப்பு சார்பில், புதிய ஓய்வூதிய திட்டத்தினை கைவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தினை அமல்படுத்திட வேண்டும், காலவரையின்றி முடக்கி வைக்கப்பட்டுள்ள சரண்வெடுப்பு ஒப்படைப்பு, உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு ஆகியவற்றை உடனடியாக வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 500க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து ஜாக்டோ ஜியோ அமைப்பினர் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பாதுகாப்புக்கு சுமார் 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் தங்கள் உரிமைக்காகவும் கோரிக்கைக்காகவும் போராடிய போராட்டக்காரர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் போலீசார் குண்டு குட்டாக ஒவ்வொருவரையும் தூக்கி அகற்றினர் அப்போது போலீசாருக்கும் போராட்டக்காரர்கள் இருக்கும் இடையே கடும் வாக்குவாதமும் தள்ளுமுள்ளும் ஏற்பட்டது. இந்நிலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதன் காரணமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சுற்றி செல்வதற்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட ஜாக்டோ ஜியோ அமைப்பினர் சுமார் 500க்கும் மேற்பட்டோரை கைது செய்யப்பட்டு தனியார் மஹாலில் அடைத்து வைக்கப்பட்டனர். நிர்வாக திறனற்ற விடியா திமுக ஆட்சியில் தங்களின் நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி போராட கூட இந்த டம்மி அரசு அனுமதிக்க வில்லை என போராட்டக்காரர்கள் கொதிப்படைந்தனர்.
Tags:    

Similar News