ராமநாதபுரம் ஜெயலலிதா பிறந்தநாள் முன்னிட்டு 6 லட்சம் மதிப்பு நலத்திட்ட உதவிகள்
ராமநாதபுரம் ஜெயலலிதா பிறந்தநாள் முன்னிட்டு 4 வார்டு உறுப்பினர் மணிகண்டன் 6 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்
Update: 2024-02-25 05:26 GMT
ராமநாதபுரத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76 வது பிறந்த நாளை முன்னிட்டு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நான்காவது வார்டு நகர் மன்ற உறுப்பினர் தனபாண்டியம்மாள் மணிகண்டன் தனியார் மஹாலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் திருஉருவப்படத்திற்கு மலர் தூவி மறியாதை செய்தனர். 4 வது வார்டில் ஓட்டு போட்டவர்கள் மற்றும் ஓட்டு போடாதவர்கள் அனைவருக்கும் ரூபாய் 6 லட்சம் செலவில் இலவசமாக பிரஷர் குக்கர் மற்றும் 10 கிலோ அரிசிபை இனிப்புகள் மொத்தம் 800 நபர்களுக்கு வழங்கப்பட்டது.இவ்விழாவில் பேசிய நகர்மன்ற உறுப்பினர் தனபாண்டியம்மாள் மணிகண்டன் இதுபோன்று ஒவ்வொரு பிறந்தநாள் விழாவிலும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பாக பொதுச் செயலாளர் மக்களின் செல்வர் டிடிவி அவர்களின் ஆணைக்கிணங்க நமது 4 வது வார்டை சேர்ந்த பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.