ராமநாதபுரம்: பொதுமக்கள் அவதி

ராமநாதபுரம் அருகே சுரங்கப்பாதையில் சுமார் 22 அடி மழை நீர் தேங்கியதால் பொதுமக்கள் செல்ல முடியாமல் கடும் அவதி அடைந்து வருகின்றனர் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் ஆட்சியர் அலுவலகத்தில் அரசு ஆவணங்களை ஒப்படைத்து விட்டு குடியேற போவதாக எச்சரிக்கை.

Update: 2023-12-18 09:04 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
ராமநாதபுரம் மாவட்டம் பட்டணம் காத்தான் ஊராட்சி பகுதிக்கு உட்பட்ட விவேகானந்தர் நகர் பகுதியில் சுமார் 300 க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். பட்டணம் காத்தான் பகுதியில் இருந்து விவேகானந்தர் நகர் செல்லும் ரயில்வே பாதையில் சுரங்கப்பாதை கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது. தற்போது ராமநாதபுரம் பகுதியில் தொடர் கனமழையால் இப்பகுதியில் உள்ள ரயில்வே சுரங்கப்பாதையில் சுமார் 22 அடி மழை நீர் புகுந்து ரயில்வே சுரங்கப்பாதை மூழ்கியது இதனால் அப்பகுதியைச் சார்ந்த பொதுமக்கள் வெளியில் செல்ல முடியாத ஒரு அவல நிலை உருவாகியுள்ளது பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் இவ் வழியாக பல்வேறு இடங்களுக்கு சென்று வந்த நிலையில் தற்போது மழை நீர் புகுந்ததால் எங்கும் செல்ல முடியாத நிலை உருவாகியுள்ளது இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில். நூறாண்டுகளுக்கு மேலாக இப்பகுதியில் வசித்து வருகின்றோம் ரயில்வே நிர்வாகத்தில் சுரங்கப்பாதை வேண்டாம் என்று தடுத்தும் சுரங்கப்பாதை அமைத்துக் கொடுத்து விட்டார்கள் இவ்வழியில் மழை நீர் புகுந்து எங்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிப்படைந்துள்ளது உடனடியாக மாற்று ஏற்பாடு செய்து தராவிட்டால் குடும்ப அட்டை வாக்காளர் அடையாள அட்டை ஆதார் அட்டை உள்ளிட்ட அரசு ஆவணங்களை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைத்துவிட்டு குடியேறும் போராட்டம் நடத்த இருப்பதாக அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் எச்சரிக்கை விடுத்தனர் திருவாடனை காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் கருமாணிக்கத்திடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை இதேபோல மாவட்ட நிர்வாகத்திடமும் பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுரியைச் சார்ந்த பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவித்தனர்.
Tags:    

Similar News