ராமநாதபுரம் : குடியரசு தின விழா

ராமநாதபுரத்தில் நடந்த குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் விஷ்ணு சந்திரன் தேசியக் கொடியை ஏற்றி, காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டு, சமாதான புறாக்களை பறக்க விட்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

Update: 2024-01-26 03:09 GMT

ராமநாதபுரம் ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் தேசியக் கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பின்னர் தேச ஒற்றுமையை வலியுறுத்தும் விதமாக சமாதான புறாக்களை பறக்க விட்டார்.

இதனையடுத்து பல்வேறு அரசு துறைகளில் சிறப்பாக பணிபுரிந்த அலுவலர்களை பாராட்டி நற்சான்றிதழ் வழங்கினார். மாவட்ட அளவில் நற்சான்றிதழ் மற்றும் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத்துறை, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் முன்னாள் படை வீரர் நலத்துறை, விலையில்லா தையல் இயந்திரங்கள், சலவைப்பெட்டிகள், முதியோர் மற்றும் விதவை உதவித்தொகை என மொத்தம் பயனாளிகளுக்கு ரூபாய் 28 லட்சத்து 84 ஆயிரத்து 802 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை  வழங்கினார். இதனைத் தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றன. இவ்விழாவில், காவல்துறை துணை தலைவர் துரை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்திஷ் , கூடுதல் ஆட்சியர் ரத்தினசாமி, மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு, உள்பட பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News