ராமநாதபுரம் : கடல் நீர் உள்வாங்கியது

ராமேஸ்வரம் தீவுப்பகுதி முழுவதும் இன்று காலை முதல் பலத்த காற்றுடன் லேசான மழை பெய்யும் நிலையில், பாம்பன் பகுதியில் கடல் நீரானது சுமார் 300 மீட்டர் உள்வாங்கியது.

Update: 2023-12-16 12:30 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் ராமேஸ்வரம் தீவு பகுதி முழுவதும் இன்று காலை முதல் பலத்த காற்றுடன் லேசான மழை பெய்து வருகின்றது இந்த நிலையில் பாம்பன் பகுதியில் கடல் நீரானது சுமார் 300 மீட்டர் உள்வாங்கியதால் கடலுக்குள் இருந்த கடல் பசுக்கள் உண்டு வாழ்கின்ற கடல் புற்கள், பாசிப்படிந்த பாறைகள் அனைத்தும் வெளியே தெரிகின்றன. மேலும் மீனவர்களுடைய நாட்டுபடகுகள் தரைதட்டி நிற்கின்றது. இதனால் மீனவர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

Similar News