ராமநாதபுரம் கோவிலை வைத்து அரசியல் செய்யவில்லை: கருப்பு முருகானந்தம்

ராமநாதபுரம்ராமர் கோயிலை வைத்து பாஜக ஒன்றும் அரசியல் செய்யவில்லை மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் தெரிவித்துள்ளார்.

Update: 2024-01-18 13:02 GMT

செய்தியாளர்களை சந்தித்த  கருப்பு முறுகானந்தம்

ராமநாதபுரத்தில் நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் கோட்ட பொறுப்பாளருமான கருப்பு முருகானந்தம் பேசுகையில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தான் ராம ராமர் கோயிலை வைத்து அரசியல் செய்கின்றனர் வேறு எவரும் செய்வதில்லை இந்து மதத்திற்கு எதிரான கொள்கைகளை பரப்புவதில் மும்முறமாக உள்ளனர் என்றார்.

மூன்று நாள் பயணமாக ஸ்ரீரங்கம் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு பிரதமர் நரேந்திர மோடி 20ம் தேதி ராமநாதபுரம் மாவட்டம் அமிர்தனந்த மயி பள்ளியின் ஹெலிபேட் தளத்தில் இறங்கி ராமநாதசுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு 22 தீர்த்தங்களிலும் புனித நீராடிய பின் ராமகிருஷ்ணா மடத்தில் உள்ள சாதுக்களிடம் ஆசீர்வாதத்தை பெற்றுக் கொண்டு இரவு அங்கு தங்குகிறார் 21 தேதி காலை கெந்தமாதனபருவத்தில் உள்ள ராமர் பாதத்தை வணங்கி விட்டு அங்கிருந்து தனுஷ்கோடி அருகே உள்ள அரிச்சல் முனை சென்று தரிசனம் செய்துவிட்டு ராமேஸ்வரத்திலிருந்துஹெபேடில் சென்னை சென்று அங்கிருந்து அயோத்தி செல்கிறார்.

Tags:    

Similar News