ராமநாதபுரம் பெண்கள் முற்றுகை!
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 500க்கும் மேற்பட்ட பெண்கள் முற்றுகையிட்டு போராட்டம் - நத்தம் ஊராட்சியை பேரூராட்சியாக இணைப்பதை கைவிட வலியுறுத்தி ஏழு கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தர்ணா போராட்டம் நடைபெற்றது.
Update: 2024-01-08 11:11 GMT
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி ஊராட்சி ஒன்றியம் நத்தம் ஊராட்சி பகுதியில் உள்ள ஆண்ட நாயக புரம் உள்ளிட்ட ஏழு கிராமங்களை பேரூராட்சியாக தரம் உயர்த்துவதால் வரி உயர்வு அதிகரிக்கும் 100 நாள் வேலை வாய்ப்பு பெண்களுக்கு இழக்க நேரிடும் புனித பல்வேறு இழப்புகளை முன்னிறுத்தி ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட பெண்கள் முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். நத்தம் ஊராட்சிக்கு உட்பட்ட மணி நகரம், ஆண்ட நாயக புரம், முத்தாதிபுரம், கள்ளக்குளம், உள்ளிட்ட ஏழு கிராமங்களை சேர்ந்த பொதுமக்களை ஒருங்கிணைந்து அபிராமம் பேரூராட்சியாக இணைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதனை கண்டித்து ஏராளமான பொதுமக்கள் ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.