ராமேஸ்வரம் மீனவர்கள் ரயில் மறியல் வாபஸ்

Update: 2023-11-03 06:14 GMT

அதிகாரிகள் - மீனவர் சங்க நிர்வாகிகள் பேச்சு வார்த்தை 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் துறைமுக பகுதியில் இருந்து கடலில் மீன் பிடிக்க சென்ற 64 மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை10 விசைப்படகுகளை பறிமுதல் செய்தது. இதை கண்டித்து அனைத்து மீனவர்கள் கூட்டமைப்பு சார்பில் இன்று மண்டபம் ரயில் நிலையத்தில் ரயில் மறியல் போராட்டம் நடத்துவது எனவும் ஆறாம் தேதி தங்கச்சி மடம் பகுதியில் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்துவது எனவும் மீனவர்கள் சங்க கூட்டத்தில் ஏக மனதாக தீர்மானிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் விஷ்ணு சந்திரன் ஏற்பாட்டில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து மீனவ சங்க பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.இதில் மத்திய மாநில அரசுகளுக்கு மீனவர்களின் கைது குறித்து தெரிவிக்கப்பட்டு ஒரு வார காலத்திற்குள் மீனவர்கள் விடுதலை செய்யவும், படகுகளை விடுவிக்கவும் ஏற்பாடு செய்து தர இருப்பதாக மாவட்ட ஆட்சித் தலைவர் விஷ்ணு சந்திரன் தெரிவித்ததை தொடர்ந்து மாவட்ட அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து ரயில் மறியல் போராட்டம் உள்ளிட்ட அனைத்து போராட்டங்களும் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது என மீனவர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் போஸ், மாவட்ட தலைவர் தேவதாஸ், மாவட்டச் செயலாளர் ஜேசுராஜ் ஆகியோர் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் தெரிவித்தனர் மேலும் இலங்கை, இந்திய மீனவர்களின் பேச்சுவார்த்தையை உடனே துவங்குவதற்கு மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டது. நாளை முதல் சனிக்கிழமை முதல் அனைத்து மீனவர்களும் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல இருப்பதாக தெரிவித்தனர்

Tags:    

Similar News