சத்தியமங்கலம் ஈத்கா திடலில் ரம்ஜான் சிறப்பு தொழுகை
சத்தியமங்கலம் ஈத்கா திடலில் நடந்த ரம்ஜான் சிறப்பு தொழுகையில் திரளான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர்.;
Update: 2024-04-12 07:24 GMT
சிறப்பு தொழுகை
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தில் ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு சிறப்பு தொழுகை நடத்தப்பட்டது. ரமலான் பண்டிகை இஸ்லாமிய மக்களால் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு சத்தியமங்கலம் சுன்னத் ஜமாத் சார்பில் ரம்ஜான் சிறப்பு தொழுகைக்காக பெரிய பள்ளிவாசல் அருகில் உள்ள மணிக்கூண்டு வளாகத்தில் இருந்து அல்லே தக்னி சுன்னத் ஜமாத் தலைவர் நதிமுல்லாகான் தலைமையில் ஊர்வலம் துவங்கி ஈத்கா மைதானத்தில் நிறைவடைந்தது. ஊர்வலத்தில் சுமார் 2500க்கும் மேற்பட்டார் கலந்து கொண்டார்கள். பின்னர் ஈத்தா மைதானத்தில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. அதன் பின் ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி தங்களது ரம்ஜான் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர்.