பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை திரும்ப பெற யாரை அணுகுவது?

கண்காணிப்பு குழுவினரால் பறிமுதல் செய்யப்படும் பொருள்களை திரும்ப பெறப்படுவதற்கான குழு அமைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் அலுவலர் தெரிவித்துள்ளார்.

Update: 2024-03-21 02:03 GMT

நாடாளுமன்ற தேர்தலில் முன்னிட்டு ராணிப்பேட்டை மாவட்டத்தில் மாவட்ட தேர்தல் அலுவலரால் நியமனம் செய்யப்பட்டுள்ள கண்காணிப்பு குழுக்களால் ஆவணங்கள் இன்றி எடுத்துச் சொல்லப்படும்போது பொதுமக்களிடமிருந்து பறிமுதல் செய்யப்படும் பணம் மற்றும் பொருட்களை உரிய ஆவணங்கள் சமர்ப்பித்து திரும்பப் பெற திட்ட இயக்குனர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

அந்தக் குழுவில், ராணிப்பேட்டை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி ( 7305089500), மாவட்ட ஆட்சியரின் கணக்குகள் பிரிவு நேர்முக உதவியாளர் சண்முகானந்தம் (8903500425), ராணிப்பேட்டை மாவட்ட கருவூல அலுவலர் சத்யகுமாரி (9176687393) ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். 

Tags:    

Similar News