ஊடக கண்காணிப்பு மையத்தை பார்வையிட்ட தேர்தல் அதிகாரி!
ராணிப்பேட்டை ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள ஊடக கண்காணிப்பு நிலையத்தை அரக்கோணம் தொகுதி தேர்தல் பார்வையாளர் சுனில் குமார் ஐஏஎஸ் ஆய்வு செய்தார்.
Update: 2024-03-28 08:31 GMT
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நாடாளுமன்ற தேர்தலை கண்காணிக்கும் வகையில் 24 மணி நேரமும் செயல்படும் ஊடக கண்காணிப்பு மையம் உள்ளது. அதனை அரக்கோணம் பாராளுமன்ற தொகுதி பொது பார்வையாளர் சுனில் குமார் ஐஏஎஸ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது ஊடகங்களில் செய்தி வருவதை எவ்வாறு அதிகாரிகள் கண்காணிக்கிறார்கள் என்பதை பார்வையிட்டார். இந்த நிகழ்வின்போது செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அசோக் மற்றும் பலர் உடன் இருந்தனர்