ராணிப்பேட்டை : மாணவர்களின் மதிய உணவினை ஆய்வு செய்த எம்.எல்.ஏ
ராணிப்பேட்டை மாவட்டம், கலவை அருகே உள்ள வேம்பி கிராமத்தில் செயல்பட்டு வரும் நடுநிலைப் பள்ளியில் சுற்றுசுவர் சம்பந்தமாக ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் ஜே.எல் ஈஸ்வரப்பன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது திடீரென சமையலறைக்கு சென்ற எம்எல்ஏ ஈஸ்வரப்பன் மாணவர்களுக்கு வழங்கக்கூடிய உணவினை உட்கொண்டு தரத்தினை ஆய்வு செய்தார். மேலும் சத்துணவு அமைப்பாளரிடம் காலை உணவு திட்டத்தில் எவ்வளவு மாணவர்கள் பயன் அடைகிறார்கள் என்பன உள்ளிட்ட விவரங்களை கேட்டறிந்தார். மேலும் மாணவர்களுக்கு சிறப்பான முறையில் உணவுகளை செய்து பரிமாற வேண்டும் என அறிவுறித்தனார். இந்நிகழ்ச்சியில் ஒன்றிய குழு தலைவர் அசோக், துணைத் தலைவர் ரமேஷ், கவுன்சிலர்கள் ஜீவா குப்பன், சுரேஷ், ஊராட்சி மன்ற தலைவர்கள் குமாரி கலைமணி, கோகுல், லதா வெங்கடேசன், திமுக ஒன்றிய அவைத் தலைவர் பாலி சுப்பிரமணி, திமுக மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர் அணி துணை அமைப்பாளர் சேஸ்சையா, திமுக ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் ஆரூர் குமார், சமூக ஆர்வலர் வழக்கறிஞர் அம்பேத்கார், வழக்கறிஞர் டெல்லிகனேஷ் உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.