கற்பழிப்பு வழக்கில் குற்றவாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை !
காளையார்கோவில் அருகே பெண்ணை கற்பழித்த குற்றவாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்க நீதிபதி தீர்ப்பளித்தார்;
By : King 24x7 Angel
Update: 2024-03-09 05:20 GMT
குற்றவாளி
சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே பொற்பனேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் அர்ஜுனன். இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு எலக்ட்ரிக் வேலை செய்வதற்காக சென்றபோது அதை ஊரைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட 37 வயது ஊமைப் பெண்ணை கற்பழித்தார். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய் காளையார்கோவில் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். இந்த வழக்கு சிவகங்கை விரைவு மகிலா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கின் தீர்ப்பினை நீதிபதி சரத்ராஜ் தெரிவிக்கையில், குற்றம் சாட்டப்பட்ட அர்ஜுனன் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டதாலும், குற்றவாளி அர்ஜுனன் ஏற்கனவே 2007 ஆம் ஆண்டு பாலியல் வழக்கில் சிக்கி 10 ஆண்டு சிறை தண்டனை பெற்று தொடர் பாலியல் வழக்கில் சிக்கி உள்ளதால் குற்றவாளிக்கு, இரட்டை ஆயுள் தண்டனையும் ரூ. 10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு தமிழக அரசு ரூ. 3 லட்சம் நிவாரணம் வழங்கவும் உத்தரவிட்டார். மேலும் இது போன்ற ஒரு குற்றவாளியை தான் வாழ்நாளில் சந்தித்தது இல்லை என்றும், இனியும் சந்திக்க விரும்பவில்லை எனவும் வேதனையோடு தெரிவித்தார்.