சிறுமி பாலியல் வன்கொடுமை - இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் தீா்ப்பு அளித்தது.

Update: 2023-12-21 07:57 GMT

சிறை தண்டனை 

திண்டுக்கல் மாவட்டம், நத்தத்தை அடுத்த இடையப்பட்டியைச் சோந்தவா் அடைக்கலசாமி (28). இவா் அதே பகுதியைச் சோந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் அளிக்கப்பட்டது.இதன்பேரில், போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த நத்தம் போலீஸாா், அடைக்கலசாமியை கைது செய்தனா். இதுதொடா்பான வழக்கு விசாரணை திண்டுக்கல் போக்ஸோ வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிவடைந்த நிலையில், அடைக்கலசாமிக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.3ஆயிரம் அபாரதம் விதித்தும் நீதிபதி கே.கருணாநிதி தீா்ப்பு அளித்தாா்.
Tags:    

Similar News