இளம்பெண்ணிடம் அத்துமீறியவர் கைது
திருவள்ளூர் மாவட்டம், பந்திகுப்பம் பகுதியில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்தவரை காவல்துறையினர் கைது செய்தனர்.;
Update: 2024-05-30 16:02 GMT
கைது
ஆர்.கே.பேட்டை அடுத்த பந்திகுப்பம் இருளர் காலனியைச் சேர்ந்தவர் சூர்யா மனைவி ராஜேஸ்வரி, 19. இவர், நேற்று முன்தினம் இரவு வீட்டிற்கு வெளியே துாங்கி கொண்டிருந்தார். அப்போது, அதே கிராமத்தைச் சேர்ந்த சரத்குமார், 30, என்பவர், ராஜேஸ்வரியிடம் தவறாக நடக்க முயற்சித்துள்ளார். இதுகுறித்த புகாரின் படி, ஆர்.கே.பேட்டை போலீசார், சரத்குமாரை கைது செய்து, திருத்தணி கிளை சிறையில் அடைத்தனர்.