ரேஷன் அரிசியை கடத்தியவர் கைது
புளியரையில் போலீசார் நடத்திய சோதனையின் போது கேரளாவிற்கு ரேஷன் அரிசியை கடத்தியவரை கைது செய்து, 7 டன் அரிசியை பறிமுதல் செய்தனர்.;
Update: 2024-02-18 02:21 GMT
பட்டுராஜன்
தென்காசி மாவட்டம் புளியரை வழியாக நெல்லையிலிருந்து கேரள மாநிலம் கொல்லத்திற்கு ஏழு டன் ரேஷன் அரிசியை கடத்திச் சென்ற பொழுது போலீசார் நடத்திய சோதனையில் ரேசன் அரிசி கடத்திய வாகனம் சிக்கியது. இதன் தொடர்ச்சியாக லாரியை ஓட்டி வந்த கோவில்பட்டியை சேர்ந்த பட்டுராஜன் என்பவரை போலீசார் கைது செய்து 7 டன் ரேஷன் அரிசி மற்றும் வாகனத்தையும் பறிமுதல் செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.