பள்ளியில் தங்க வைக்கபட்ட மக்களுக்கு கோட்டாட்சியர் நிவாரண உதவி
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே பள்ளியில் தங்கவைக்கபட்ட மக்களுக்கு வருவாய் கோட்டாட்சியர் தனலட்சுமி நிவாரணம் வழங்கினார்.
Update: 2023-12-05 07:31 GMT
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி கண்ணமங்கலம் ஓண்ணுபுரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மிக்ஜாம் புயல் காரணமாக கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது.தொடர்ந்து கனமழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்த நிலையில், கண்ணமங்கலம் ஓண்ணுபுரம் கொங்கரம்பட்டு உள்ளிட்ட கிராமங்களில் சாலையோரங்களில் வாழ்ந்து வரும் இருளர் இன பொதுமக்கள் சுமார் 50க்கும் மேற்பட்டோரை கண்ணமங்கலம் அரசு ஆரம்ப பள்ளியில் தங்க வைத்துள்ளனர். இதனையடுத்து அரசு பள்ளியில் தங்கவைக்கபட்ட இருளர் பொது மக்களை ஆரணி கோட்டாச்சியர் தனலட்சுமி நேரில் சென்று உணவு பொருட்கள், தங்குவதற்கு பெட்சீட் உள்ளிட்ட உபகரணங்களை வழங்கினார். அப்போது கண்ணமங்கலம் பேரூராட்சி தலைவர் மகாலட்சுமி கோவர்த்தனன் ,துணை வட்டாட்சியர் திருவேங்கடம் ,செயல் அலுவலர் முனுசாமி, வருவாய் ஆய்வாளர் சந்திரன் ,கிராம நிர்வாக அலுவலர் தமிழரசன், மற்றும் வருவாய் துறையினர் உடன் இருந்தனர்.