ஒகேனக்கல்லில் மீண்டும் பரிசல் இயக்கம்

ஒகேனக்கல்லில் பராமரிப்பு பணிகள் காரணமாக நிறுத்தப்பட்ட பரிசல்கள் ஒரு மாதத்திற்கு பின்பு இயக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

Update: 2024-05-10 03:06 GMT

 பரிசல் இயக்கம்

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டமன்ற தொகுதி மற்றும் வட்டத்துக்கு உட்பட்ட பிரபல சுற்றுலா தளமான ஒகேனக்கல் காவிரி ஆற்றிற்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் தினம் தரும் வந்து செல்வது வழக்கம் அவர்கள் அருவியில் குளித்தும் பரிசலில் சென்றும் மகிழும் நிலையில் தற்போது ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வினாடிக்கு 200 கன அடி வீதம் வந்து கொண்டுள்ளது.

மேலும் நீர்வரத்து குறைந்ததாலும் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதாலும் ஒரு மாதத்திற்கும் மேலாக பரிசல் இயக்குவது நிறுத்தப்பட்டது. தற்போது பராமரிப்பு பணி முடிந்து. நேற்று மீண்டும் பரிசல் இயக்க அனுமதி அளிக்கப்பட்டு, பரிசல் இயக்கப்பட்டது. இதனை அடுத்து ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் பரிசலில் சென்று மகிழ்ந்தனர் சுற்றுலா பயணிகள் வருகையால் கடைகள் உணவுகளில் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது.

Tags:    

Similar News