திண்டுக்கல் : மாநில கைப்பந்து போட்டியில் சாதனை

மாநில கைப்பந்து போட்டியில் கள்ளிமந்தையம் பிருந்தாவன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் தங்கப்பதக்கம் வென்றனர்.

Update: 2023-12-07 01:24 GMT

மாநில கைப்பந்து போட்டியில் சாதனை

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை சார்பில் திருச்சி மாவட்டத்தில் நடந்த 64வது குடியரசு தினம்,பாரதியார் தின மாநில கைப்பந்து போட்டியில் கள்ளிமந்தையம் பிருந்தாவன் மெட்ரிக் பள்ளி மாணவிகள் 17 வயதுக்கு உட்பட்ட பிரிவில் கலந்துகொண்டு தங்கப்பதக்கம், வெற்றிக்கோப்பை கைப்பற்றினர்.சாதித்த மாணவிகள் , உடற்கல்வி ஆசிரியர் டி.ரமேஷ்க்கு பொதுமக்கள் , பள்ளி நிர்வாகம் சார்பில் மேளதாளம் முழங்க மாட்டு வண்டியில் அழைத்து வந்து ஆரத்தி எடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது.
Tags:    

Similar News