விடுதியில் அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு
புதுக்கோட்டை நகரிலுள்ள தனியார் தங்கும் விடுதியில் இளைஞரின் சடலம் அழுகிய நிலையில் மீட்கப்பட்டுள்ள சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Update: 2024-05-26 04:41 GMT
புதுக்கோட்டை நரிமேடு அரசுக் குடியிருப்பைச் சேர்ந்தவர் சுனிதர் மகன் விவேகானந்தன் (32). இவர் வீட்டிலிருந்து வெளியேறி வந்து நகரப் பகுதியிலுள்ள தனியார் தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளார். கடந்த சில நாட்களாக இவரது அறை திறக்கப்படவில்லை என்றும், சனிக்கிழமை பகலில் அறையில் இருந்து மோசமான வாடை வந்ததாகவும் நகரக்காவல் நிலையத்துக்கு தகவல் கிடைத்தது.
இதைத் தொடர்ந்து அங்கு சென்று சோதனையிட்ட போலீஸார், அறைக்குள் விவேகானந்தன் சடலமாகக் கிடந்துள்ளார். உடல் அழுகிய நிலையில் இருந்தது. இதையடுத்து உடலை மீட்ட போலீஸார், புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர். மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.