ராஜபாளையம் அருகே ரத்தக்காய்த்துடன் ஆண் சடலம் மீட்பு
விருதுநகர் மாவட்டம் வேலாயுதபுரம் அருகே பாலத்தின் அடியில் ரத்தக்காய்த்துடன் ஆண் சடலம் மீட்பு கொலையா தற்கொலை என போலீசார் விசாரணை;
சடலம் மீட்பு
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சத்திரப்பட்டி சாலை அருகே வேலாயுதபுரம் பாலம் உள்ளது இந்த பாலத்தின் அடியில் ஆண் சடலம் கிடப்பதாக ராஜபாளையம் தெற்கு காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது தகவலின் பெயரில் போலீசார் விரைந்து சென்று ஆண் சடலத்தை மீட்டு விசாரணை செய்தனர்.
போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் சமுசிகாபுரம் அம்பேத்கர் காலனி பகுதியைச் சேர்ந்த சரவணன் வயது 45 வயது மனைவி இருளாயி இவர்களுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளது என்பதும் . சரவணன் வெல்டிங் வேலை பார்த்து வந்த நிலையில் ரத்தக்காயுடன் சடலமாக மீட்டனர்.
இவரை யாரும் கொலை செய்தார்களா அல்லது வேறு ஏதும் காரணமா என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர் தொடர்ந்து அந்த பகுதியில் சிசிடிவி காட்சி மற்றும் உறவினர்களிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.