மோசடி வழக்கில் ரூபாய் 54.56 லட்சம் மீட்பு

சிவகங்கை மாவட்டத்தில் நடைபெற்ற மோசடி வழக்கில் ரூபாய் 54.56 லட்சம் மீட்பு - எஸ்பி தகவல்

Update: 2024-02-16 06:27 GMT

எஸ்பி தகவல்

சிவகங்கையில் மோசடி தொடர்பான வழக்கில் 13 கோடி ரூபாய் முடக்கம் செய்யப்பட்டு ரூ.47.22 லட்சம் மீட்டு பாதிக்கப்பட்டவர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதாக எஸ்.பி., அர்விந்த் தெரிவித்தார். இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது: 2021ம் ஆண்டு முதல் சைபர் கிரைம் போலீஸ் நிலையம் செயல்பட்டு வருகிறது. 2023ம் ஆண்டு 620 புகார்கள் சைபர் கிரைம் இலவச எண் 1930 மற்றும் www.cybercrime.gov.in மூலமாக வரப்பெற்று அப்புகார்களுக்கு 580 மனு ரசீது பதிவு செய்தும், 40 புகார்களுக்கு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை டெல்லி, மேற்குவங்காளம், கர்நாடகா, உத்திரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சார்ந்த 21 குற்றவாளிகள் நடப்பாண்டில் கைது செய்தும், அவர்களின் செயல்பாடுகளை முடக்கும் விதமாக குற்றசெயலுக்கு பயன்படுத்தப்படும் 23,010 சிம் கார்டுகள் மாநிலத்தில் முதல் மாவட்டமாக முடக்கியும், குற்றவாளிகளின் பல்வேறு வங்கி கணக்குகளை முடக்கம் செய்து இதுவரை 13 கோடியே 17 லட்சத்து 90 ஆயிரத்து 743 ரூபாய் தொகை முடக்கம் செய்துள்ளோம். இவர்களிடம் இருந்து பாதிக்கப்பட்ட புகார்தாரர்களின் வங்கி கணக்குகளில் நேரடியாக இதுவரை 47 லட்சத்து 22 ஆயிரத்து 034 ரூபாய் வரவு வைக்கப்பட்டுள்ளது. அதேபோல் 2024 ஆம் ஆண்டில் இதுவரை 101 புகார்கள் பெறப்பட்டுள்ளது. 64 புகார்களுக்கு மனு ரசீது பதிவு செய்தும் 3 புகார்களுக்கு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தாண்டு தொடக்கத்தில் 1 கோடியே 32 லட்சத்து 53 ஆயிரத்து 251 ரூபாய் முடக்கம் செய்யப்பட்டுள்ளது. முடக்கம் செய்யப்பட்ட தொகையில் இருந்து இதுவரை 7 லட்சத்து 34 ஆயிரத்து 049 ரூபாய் மீட்டு பாதிக்கப்பட்ட வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளது. தற்போது அதிகமாக நடைபெற்று வரும் அங்கீகரிக்கப்படாத கடன் செயலிகள் மோசடி, ஆன்லைன் முதலீடு, பகுதி நேர வேலை மோசடி, கிரிப்டோகரன்சி முதலீடு மற்றும் ஒடிபி, வங்கி தகவல்களை பெற்று ஏமாற்றும் நபர்களிடமிருந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும், ஆன்லைனில் முகம் தெரியாத நபர்களை நம்பி பணத்தை முதலீடு செய்து ஏமாற வேண்டாம் எனவும் தெரிவித்தார்.
Tags:    

Similar News