ரூ.4 கோடி மதிப்பிலான கோவில் நிலம் மீட்பு - அறநிலையத்துறை நடவடிக்கை
Update: 2023-11-23 06:00 GMT
கோவில் நிலம் மீட்பு
சிவகங்கை மாவட்டம், சிவகங்கை தெப்பக்குளம் எதிரே உள்ளது கெளரி விநாயகர் திருக்கோவில். இந்த கோவிலுக்கு சொந்தமானதாக கூறப்படும் சுமார் 528 ஏக்கர் நிலமானது காமராஜர் காலனியில் உள்ளது. இந்த பகுதியில் ஏராளமானோர் ஆக்கிரமித்து வீடுகள் கட்டியுள்ளதாக கூறப்படும் நிலையில் அந்த நிலங்களை தற்சமயம் இந்து அறநிலையத்துறையினர் பழைய ஆவனங்களையும், நவீன தொழில் நுட்பங்களை பயன்படுத்தி ஒவ்வொரு பகுதியாக மீட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக இன்று சஞ்சய் நகர் பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த சுமார் 4 கோடி மதிப்பிலான 8.90 ஏக்கர் நிலத்தினை மீட்டு அதனை சுற்றி வேலி அமைத்தனர்.