கிணற்றில் டிரைவர் சடலம் மீட்பு
சேலம் அருகே கருப்பூரில் கிணற்றில் இருந்த டிரைவரின் சடலத்தை மீட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.;
Update: 2024-02-01 04:53 GMT
சடலம் மீட்பு
சேலம் கருப்பூர் அருகே வெள்ளாளப்பட்டி பழைய காலனி பகுதியை சேர்ந்த சுப்பிரமணி மகன் வேல்முருகன் (வயது 28). இவர், கருப்பூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் டிரைவராக உள்ளார். இவர், அந்த பகுதியில் உள்ள கிணற்றில் பிணமாக மிதந்தார். இதுதொடர்பாக கருப்பூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று வேல்முருகன் உடலை மீட்டனர். வேல்முருகன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது நீரில் மூழ்கி இறந்தாரா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.