படுத்துக்கொண்டே பைக் ஓட்டி சாகசம் - இளைஞர் மீது 9 பிரிவுகளில் வழக்கு

துறையூர் அருகே புலிவலம் திருச்சி- துறையூர் சாலையில் படுத்துக் கொண்டு உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் மோட்டார் பைக்கை ஓட்டிச் சென்ற இளைஞர் மீது 9 பிரிவின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.;

Update: 2024-06-10 07:23 GMT
படுத்துக்கொண்டே பைக் ஓட்டி சாகசம் -  இளைஞர் மீது 9 பிரிவுகளில் வழக்கு

இளைஞர் நிவாஷ்

  • whatsapp icon

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே புலிவலத்தில் உள்ள திருச்சி துறையூர் சாலையில் கடந்த சில நாட்களுக்கு முன் இளைஞர் ஒருவர் படுத்துக் கொண்டு உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் மோட்டார் பைக்கில்  சாகசம் செய்து அலட்சியமாக ஓட்டிச் சென்றார். இந்த வீடியோ கட்சி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வந்தது. வீடியோ காட்சிகளை வைத்து சாகசம் செய்த இளைஞர் குறித்து புலிவலம் போலீசார் விசாரணை செய்து வந்தனர்.

விசாரணையில் முசிறி தாலுகா புலிவலம் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்த சிங்காரத்தின் 19 வயதான நிவாஷ் என தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து புலிவலம் காவல் நிலையத்தில் நிவாஷ் மீது 68/24, U/s 278, 279, 286, 336, 308, 114 IPC r/w 184, 188 MV-601 LQ வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் சாகசத்திற்கு பயன்படுத்திய மோட்டார் பைக்கை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இனிவரும் காலங்களில் இது போன்ற சாகசங்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையபான சட்ட நடவடிக்கை மேற்கொண்டு, வானங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் இதுபோன்று இருசக்கர வாகனங்களில் பொதுமக்கள் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் இருசக்கர வாகன சாகசம் செய்பவர்கள் விபரங்கள் குறித்து திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளரின்  உதவி எண் 9487464651 என்ற எண்ணிற்கு தகவல் தெரியப்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Tags:    

Similar News